Asianet News TamilAsianet News Tamil

இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய லாரி..! தூக்கி வீசப்பட்டு இருவர் பரிதாப பலி..!

நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

two killed as lorry made accident with a bike
Author
Namakkal, First Published Oct 24, 2019, 3:12 PM IST

நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தத்தைச் சேர்ந்தவர் ஜான் பாஸ்கர். இவரது மகன் ரோஹித்(21). டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு இன்ஜினியராக இருக்கிறார். சேலத்தில் இருக்கும் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் அசேன்(20). நாமக்கல் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(22). இவர்கள் மூவரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

two killed as lorry made accident with a bike

சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் வேப்பநத்தத்தில் இருந்து நாமக்கல் நோக்கி மூன்று பேரும் புறப்பட்டுள்ளனர். ஒரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் பயணித்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தை ரோகித் ஓட்டி வந்துள்ளார். அசேனும் மணிகண்டனும் பின்னால் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். நாமக்கல் அருகே இருக்கும் நாகராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது.

two killed as lorry made accident with a bike

அப்போது அதே சாலையின் எதிரே லாரி ஒன்று வேகமாக வந்து இருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனமும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த ரோஹித் மற்றும் அசேன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மணிகண்டன் உயிருக்கு போராடியுள்ளார்.

two killed as lorry made accident with a bike

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த நாமக்கல் காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அசேன் மீது கொலை மற்றும் வழிப்பறி சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 10 பைசா நாணயத்திற்கு வந்தது யோகம்..! அடித்து பிடித்து தேடும் பொதுமக்கள்..

Follow Us:
Download App:
  • android
  • ios