Asianet News TamilAsianet News Tamil

நாட்டு மருந்து குடித்த வாலிபர் பரிதாப பலி..! சாமி குத்தம் என நழுவிய வைத்தியர்..!

சிவ குமாரும் அவரது மகனும் வேலுவை சந்தித்து சிகிச்சை பெற்று மருந்து வாங்கியுள்ளனர். வாட்டர் கேனில் ஊற்றிக் கொடுக்கப்பட்ட மருந்தை வேலு சொன்ன பத்திய முறைப்படி நேற்று இரவு 9 மணிக்கு சிவ கிருஷ்ணன் குடித்துள்ளார். குடித்த சில நிமிடங்களில் மயங்கிய அவர் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிவகுமார் வைத்தியரை தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறியுள்ளார். அதற்கு பயப்பட வேண்டாம் சரியாகி விடும் என வேலு தெரிவித்திருக்கிறார்.

youth died due to drinking local medicine
Author
Tamil Nadu, First Published Mar 17, 2020, 12:32 PM IST

மதுரை மாவட்டம் விளாச்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சிவ கிருஷ்ணன்(20) என்கிற மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். சிவகிருஷ்ணனுக்கு பிறவியில் இருந்து வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தேனி அருகே நாட்டு வைத்தியர் ஒருவர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாகவும் அங்கு சென்றால் குணமடையும் என்று நண்பர்கள் கூறவே மகனை அங்கு சிவ கிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார். 

youth died due to drinking local medicine

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் ஏ.வாடிபட்டி என்ற கிராமத்தில் வேலு என்பவர்  நாட்டு வைத்தியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். அங்கு சென்ற சிவ குமாரும் அவரது மகனும் வேலுவை சந்தித்து சிகிச்சை பெற்று மருந்து வாங்கியுள்ளனர். வாட்டர் கேனில் ஊற்றிக் கொடுக்கப்பட்ட மருந்தை வேலு சொன்ன பத்திய முறைப்படி நேற்று இரவு 9 மணிக்கு சிவ கிருஷ்ணன் குடித்துள்ளார். குடித்த சில நிமிடங்களில் மயங்கிய அவர் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிவகுமார் வைத்தியரை தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறியுள்ளார். அதற்கு பயப்பட வேண்டாம் சரியாகி விடும் என வேலு தெரிவித்திருக்கிறார்.

7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!

youth died due to drinking local medicine

ஆனால் காலை வரையில் சிவ கிருஷ்ணன் மயக்கமுற்ற நிலையிலேயே இருந்ததால் மீண்டும் நாட்டு வைத்தியர் வேலுவை  அழைத்து கேட்ட போது ,"பத்தியம் ஒழுங்காக கடைபிடிக்காததால் சாமி குற்றமாகி இருக்கும்," என பதிலளித்துள்ளார். தொடர்ந்து சிவ கிருஷ்ணனை பரிசோதனை செய்ததில் அவர் மரணமடைந்த்திருப்பது தெரிய வந்தது. அதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். தகவலிறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios