தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி முதல் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை போன்ற வெளி நகரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்வார்கள். அதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

ரெயில் எண் 82609 தாம்பரம்- நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7.10 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர் 1, ஏசி3 டயர்4, தூங்கும் வசதி பெட்டிகள் 13, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2, லக்கேஜ் கம்பிரேக் வேன் 2 பெட்டிகளும் இடம்பெறும். இந்த ரெயிலுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ரெயில் எண் 06006 நாகர்கோவில்- திருச்சி சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14-ந்தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு திருச்சி சென்றையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர்1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 13, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 மற்றும் லக்கேஜ் கம் பிரேக்வேன் 2 பெட்டிகளும் இடம்பெறும். இந்த ரெயிலுக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும திண்டுக்கல் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ரெயில் எண். 82606 நாகர்கோவில்- தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 19-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்படுவது மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர் 1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகள் இடம் பெறும். இந்த ரெயிலுக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் எண். 06075 தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 20-ந்தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர்1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகள் இடம் பெறும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.