திருப்பத்தூரில் இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஷ்வரன் கழிவறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரிட்டாப்பட்டியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர் 2013-ம் ஆண்டைய ஆயுதப்படை காவலரான இவர் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கோயம்புத்தூரில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 4-ம் அணியில் காவலராகப் பணியாற்றி வந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இடமாறுதலாகி சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை முகாமில் இணைந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலுள்ள இந்தியன் வங்கியின் பாதுகாவலராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல இன்று காலை பணிக்கு வந்த அவர் கழிவறைக்கு சென்று பாதுகாப்புத் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு துடிதுடித்து உயிரிழந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ந்துபோன சக ஊழியர்கள் யோகேஷ்வரன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யோகேஷ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  கட்டிலில் கட்டிப்பிடித்து கள்ளக்காதலனுடன் முரட்டுத்தனமாக மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் விபரீத முடிவு

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேஸ்வரனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து வரும் நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடை செய்துள்ளது.