Asianet News TamilAsianet News Tamil

திமுக மகளிர் அணி தலைவிக்கு ஓராண்டு சிறை !! செக் மோசடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு ...

காசோலை மோசடி வழக்கில் திமுக முன்னாள் பெண் எம்எல்ஏ விற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது .
 

dmk women wing president gets imprisoned
Author
Tamil Nadu, First Published Aug 16, 2019, 4:11 PM IST

திமுக சார்பில் 1989 , 1996 சட்டமன்ற தேர்தல்களில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காஞ்சனா கமலநாதன் (64 ) .இவர் திமுக மகளிரணி தலைவியாகவும் உள்ளார் .

கடந்த 2015 ம் ஆண்டு காவேரி பட்டணத்தைச்  சேர்ந்த தேவி ( 43 ) என்பருக்கு 23 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் . அது வங்கியில் பணமின்றி திரும்பியது . இது குறித்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . 

dmk women wing president gets imprisoned

இந்த நிலையில் காசோலை மோசடியில் ஈடுபட்ட காஞ்சனாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும் , தேவிக்கு பணத்தை உடனே வழங்க வேண்டும் எனவும் நீதிபதி  தீர்ப்பளித்தார் . தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது .

dmk women wing president gets imprisoned

இதற்கு முன்பு  செல்வம் என்பவருக்கு 24 லட்சம் காசோலை கொடுத்து ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார் . அந்த வழக்கில் மேல் முறையீடு  செய்து , பிணையில் வெளிவந்துள்ளார் .

Follow Us:
Download App:
  • android
  • ios