Asianet News TamilAsianet News Tamil

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் வேதனை... தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை..!

காஞ்சிபுரம் அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி சந்தியா காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றும் சந்தோஷத்தை கொண்டாட முடியால் பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

t0-th class student suicide
Author
Tamil Nadu, First Published Apr 29, 2019, 2:13 PM IST

காஞ்சிபுரம் அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி சந்தியா காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றும் சந்தோஷத்தை கொண்டாட முடியால் பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் இந்த தேர்வு முடிவடைந்தது. மக்களவை தேர்தல் காரணமாக இந்த தேர்வு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இதற்கான முடிவுகள் இன்று வெளியானது. இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 t0-th class student suicide

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த தண்டரை கிராமத்தைச் சோ்ந்த மாணவி சந்தியா ஒருவா் 10-ம் வகுப்பு தோ்வு முடிவை எதிர்பார்த்து  காத்தியிருந்தார். அப்போது இந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாம் தோற்றுவிடுவோமோ என்ற சந்தேகம் மாணவிக்கு திடீரென ஏற்பட்டுள்ளது.

 t0-th class student suicide

இந்த அச்சத்திலேயே மாணவி சந்தியா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடா்ந்து 9.30 மணிக்கு வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றது  தெரியவந்தது. தேர்ச்சி பெற்றும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios