Asianet News TamilAsianet News Tamil

மீறி வீடு வாங்கப் போறீங்களா..? ஜெயிலுக்குப் போயிடுவீங்க... கலெக்டர் எச்சரிக்கை..!

தனியார் கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ள சென்னையை அடுத்த தாழம்பூர் யூனிட்டில் உள்ள சில வீட்டு மனைகளை வாங்கினால் சிறைக்கு செல்வது உறுதி என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

kanchi collector warns people on casa grande home offer
Author
Tamil Nadu, First Published Aug 31, 2019, 4:01 PM IST

தனியார் கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ள சென்னையை அடுத்த தாழம்பூர் யூனிட்டில் உள்ள சில வீட்டு மனைகளை வாங்கினால் சிறைக்கு செல்வது உறுதி என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

சென்னையில் வீடு அல்லது மனை வாங்குவதை மக்கள் கனவாக கொண்டுள்ளனர். இதனால் சில வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள் மக்களின் ஆசையை தங்களுக்கான வியாபாரமாக மாற்றி, விவகாரமுள்ள நிலங்களை விற்றுத் தீர்த்து வருகின்றன. இதனால் பல்வேறு சட்ட சிக்கலுக்கு மக்களும் ஆளாகின்றனர்.kanchi collector warns people on casa grande home offer

அதிலும், சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையை விட, மலிவான விலையில் வீட்டு மனைகளை மோசடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையில், சென்னையை அடுத்த தாழம்பூரில் தள்ளுபடி விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகிறது என பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.

kanchi collector warns people on casa grande home offer

மலிவு விலை வீட்டு மனை  நிறுவன விளம்பரத்தை நம்ப வேண்டாம்- காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் வில்லங்கம் என்னவென்றால், அந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ள இந்த வீட்டுமனை பிரிவுகள் அனைத்தும் அரசின் விசாரணை வளையத்திற்குள் உள்ளது. இது தொடர்பாக ஏதும் தெரியாமல் அந்த நிலங்களை மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.kanchi collector warns people on casa grande home offer

இந்த நிலையில், தனியார் நிறுவனம் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ள வீட்டு மனைப்பிரிவு குறித்து அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தள்ளுபடியில் வீட்டு மனையை வாங்கவுள்ள மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தள்ளுபடி விளம்பரங்களை நம்பி வீட்டு மனைகளை வாங்கினால் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios