Asianet News TamilAsianet News Tamil

அத்தி வரதர் சிலை எப்படி? எங்கே? எந்த நிலையில் வைக்கப்பட இருக்கிறது..? அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்

48 நாட்கள் தரிசனம் முடிந்து அனந்தசரஸ் குளத்திற்குள் இன்று  செல்ல இருக்கிறார் அத்தி வரதர். அத்தி வரதர் சிலை குளத்திற்குள் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

How is the athi varadhar statue? Where? In what position should it be placed?
Author
Tamil Nadu, First Published Aug 17, 2019, 10:33 AM IST

48 நாட்கள் தரிசனம் முடிந்து அனந்தசரஸ் குளத்திற்குள் இன்று  செல்ல இருக்கிறார் அத்தி வரதர். அத்தி வரதர் சிலை குளத்திற்குள் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. How is the athi varadhar statue? Where? In what position should it be placed?

அத்தி வரதர் எனும் நாமம் தமிழகத்தைத் தாண்டி, உலகம் முழுவதும் இந்துக்கள் வாழும் பகுதிகளில் உச்சரிக்கப்பட்டது. தொடக்கத்தில் பக்தர்கள் கூட்டம் பெரிய அளவில் கூடவில்லை என்றாலும், 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் தரிசனம் என்பதால், ஒவ்வொரு நாளும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

How is the athi varadhar statue? Where? In what position should it be placed?

48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த பின் மீண்டும் தன் இருப்பிடம் நோக்கி செல்கிறார் அத்திவரதர். பொதுவாக கோவில் குளத்தில் நீராழி மண்டபம் இருக்கும். ஆனால், அத்திவரதர் சயன கோலத்தில் இருக்கப் போகும் அனந்தசரஸ் குளத்தில், நீராழி மண்டபம் அருகே அத்தி வரதருக்காக தனி அறை உள்ளது. சிறு அறையில் கல்லால் கட்டப்பட்ட நீர்தொட்டி அமைக்கப்பட்டிருக்கும். மேற்கு பக்கத்தில் அத்தி வரதர் திருமுகம் தலையானது இருக்க கிழக்கு பக்கதில் அத்தி வரதர் திருவடிகள் இருக்கும். How is the athi varadhar statue? Where? In what position should it be placed?

முன்னதாக அவருக்கு அர்த்த ஜாமத்தில் பூஜைகள் நடைபெற்று தீப ஆராதனை செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு மங்கள இசையுடன் புஸ்பங்கள் சாத்தி வேட்டி கட்டப்பட்டு அனந்தசரஸ் குளத்தில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சுத்திகரிக்கப்பட்ட நீரில் கிடத்தப்படுகிறார் அத்திவரதர். அத்திவரதர் கிடத்தப்படுவது குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளும் அர்ச்சகர்கள், ஆகம விதிப்படி குளத்தில் வைக்கப்படும் போது அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios