Asianet News TamilAsianet News Tamil

மாமல்லபுரம் வரும் மோடி - ஜின்பிங்... சிற்பங்களைப் பார்த்து அதிசயத்த சீன அதிகாரிகள்... வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து வியப்பு!

ஒவ்வொரு அதிகாரியும் பாறையைச் சுற்றிவந்து, இறுதியில் அதைப் புகைப்படமும் பிடித்துக்கொண்டனர். எனவே மோடியும் ஜின்பிங்கும் இந்த பாறை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மாமல்லபுரம் சிற்பங்களும், வெண்ணெய் உருண்டைப் பாறையும் உலக அளவில் புகழ்பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.    
 

China officials in Mamallapuram
Author
Mamallapuram, First Published Sep 24, 2019, 7:34 AM IST

மாமல்லபுரத்த்தில் நடைபெற உள்ளா சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பின்போது, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 China officials in Mamallapuram
அடுத்த மாதம் இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்கை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து பிரதமர் மோடி பேச இருக்கிறார். உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபர் மாமல்லபுரம் வர இருப்பதும், இரு தலைவர்கள் அந்த நகரில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதும் அந்த ஊருக்குக் கிடைத்த பெருமையாகி இருக்கிறது. பல்லவர்களின் தலைநகராக காஞ்சிபுரம் இருந்த வேளையில், அந்த ஆளுகைக்கு உட்பட்ட மாமல்லபுரம் துறைமுக நகரமாக இருந்தது.

China officials in Mamallapuram
பல்லவர்களின் ஆட்சியில் மன்னராக இருந்த கந்தவர்மனுக்கு மகனாக பிறந்த போதி தருமர், பின்னர் சீனாவுக்கு சென்று புத்த மதத்தை தழுவியதாக கூறப்படுகிறது. சீனாவில் புகழ்பெற்ற போதி தருமரின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்ற வகையிலேயே, சீன அதிபர் - இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தையை காஞ்சிபுரத்துக்குட்பட்ட மாமல்லபுரத்தில் நடத்த தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இரு தலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் தயாராகிவருகிறது. அந்த நகரில் சீரமைப்பு பணிகளை மத்திய மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மத்திய, மாநில தொடர்ச்சியாகப் பார்வையிட்டுவருகிறார்கள்.

China officials in Mamallapuram
இரு தலைவர்களின் வருகைக்குப் பிறகு மாமல்லபுரம் சீனாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைப் பார்வையிட உள்ளனர். இரு தலைவர்களும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் உள்ளார்கள். அண்மையில் மாமல்லபுரம் வந்த சீன பாதுகாப்பு அதிகாரிகள், மாமல்லபுரத்தைச் சுற்றி பார்த்து வியந்தனர். குறிப்பாக பல நூறு ஆண்டுகளாக சரிவான பாறையில் நிற்கும் வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து அதிசயத்து போனார்கள்.China officials in Mamallapuram
ஒவ்வொரு அதிகாரியும் பாறையைச் சுற்றிவந்து, இறுதியில் அதைப் புகைப்படமும் பிடித்துக்கொண்டனர். எனவே மோடியும் ஜின்பிங்கும் இந்த பாறை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மாமல்லபுரம் சிற்பங்களும், வெண்ணெய் உருண்டைப் பாறையும் உலக அளவில் புகழ்பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.    

Follow Us:
Download App:
  • android
  • ios