உதகை தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 123வது மலர் கண்காட்சி தொடங்கியது. உதகையில் 5 நாட்கள் நடைபெறும் மலர்க் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

ஊட்டியில் அமைந்துள்ளது தாவரவியல் பூங்கா.  இப்பூங்கா 1847- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது. இப்பூங்காவானது தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரிக்கப்படுகிறது. இப்பூங்கா ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழ்தள தோட்டம், மேல்தள அழகான நீருற்றுப்பகுதி, புதிய தோட்டம், இத்தாலியன் தோட்டம், அருமையான செடிகோடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு, மற்றும் செடி வளர்ப்பகம் என பிரிக்கப்பட்டுள்ளது. 

கோடைகாலத்தில் இந்த மலர் கண்காட்சி துவக்கப்படுவது வழக்கம் அதன்படி இந்த முறை 1,20,000 மலர்களை கொண்டு மாதிரி பாராளுமன்றமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5-லட்சத்திற்கும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வர இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள்,சாலை போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.