திருடனாலும் திறக்க முடியாத திண்டுக்கல் பூட்டு.. அடித்தது ஜாக்பாட்!!

திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அந்த தொழில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

dindukal clevis got geographic recognition

பூட்டு என்றதும் தமிழர்களுக்கு ஞாபகத்திற்கு வருவது திண்டுக்கல் தான். திண்டுக்கல் மாவட்டம்  பூட்டு தயாரிப்புக்குப் உலகவில் பெயர் பெற்ற ஊராகும். அங்கு இருக்கும்  நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக  உள்ளது.

dindukal clevis got geographic recognition

திண்டுக்கல்லில் விவசாயம் இல்லாதபோது அதற்கு மாற்றுத் தொழிலாக உருவெடுத்தது தான் பூட்டு தொழில். அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பெருமளவில் இத்தொழில் ஈடுபட்டனர். அதனால் திண்டுக்கல் பூட்டு நாளைடைவில் மிக பிரபலம் ஆனது. 

இன்று இந்த இயந்திர உலகத்தில் தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டதால் குடிசை தொழிலாக இருக்கும் திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு சமீப காலமாக நலிவடைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் தான் தற்போது திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் நலிவடைந்த தொழில் இனி மீளும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

dindukal clevis got geographic recognition

திண்டுக்கல் பூட்டோடு சேர்த்து காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios