Asianet News TamilAsianet News Tamil

ஜீவஜோதியால் சீரழிந்த சரவண பவன் அண்ணாச்சி... ராஜகோபால் தவிர 9 பேர் நீதிமன்றத்தில் சரண்..!

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர்களை சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

murder case...Saravana bhavan founder other 9 persons surrender
Author
Tamil Nadu, First Published Jul 8, 2019, 6:22 PM IST

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர்களை சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி. இவர், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மேன்மையை அடையலாம் என ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே 2 மனைவிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை 3-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ராஜகோபால். இதனிடையே பிரின்ஸ் சாந்தகுமார் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். murder case...Saravana bhavan founder other 9 persons surrender

பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து 2004-ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். அதை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிர்ச்சி அளித்தது.murder case...Saravana bhavan founder other 9 persons surrender

ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜூலை 7-ம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபால் சரணடைய வேண்டும் உத்தரவிடப்பட்டது. murder case...Saravana bhavan founder other 9 persons surrender

இதனையடுத்து, உடல்நிலையை காரணம் காட்டி ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் சரணடையவில்லை. பின்னர், தண்டனை பெற்ற 9 பேர், 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அனைவரும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios