Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் கண்டம்...!! மழை விடாமல் வெளுத்து வாங்கும் என்று அறிவிப்பு...!!

அடுத்து வரும் இரு தினங்களில் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் கனமழை பொருத்தவரையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பொழிய வாய்ப்புள்ளது.

meteorology department alert rain warning in next two days rail will continue
Author
Chennai, First Published Oct 22, 2019, 3:42 PM IST

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 சென்டி மீட்டர்மழைபதிவாகி உள்ளது.

meteorology department alert rain warning in next two days rail will continue

அடுத்து வரும் இரு தினங்களில் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் கனமழை பொருத்தவரையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பொழிய வாய்ப்புள்ளது. சென்னை விழுப்புரம் கடலூர் புதுவை டெல்டா மாவட்டங்கள் அரியலூர் பெரம்பலூர் சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்பிருக்கிறது.

 meteorology department alert rain warning in next two days rail will continue

மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும்( 22, 23) ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகரில் அடுத்த இரு தினங்களுக்கு மழை தொடரும்.மழையின் அளவு பாம்பன் மண்டபம் 18 சென்டிமீட்டர், ராமேஸ்வரம் தங்கச்சிமடம் 17 சென்டிமீட்டர் காரைக்கால் புதுக்கோட்டை அறந்தாங்கி 11 சென்டிமீட்டர் சேலம் மோகனூர் பத்து சென்டிமீட்டர் மகாபலிபுரம் பெருங்களூர் பெருஞ்சாணி 9 சென்டிமீட்டர் தரங்கம்பாடி 8 சென்டி மீட்டர் தஞ்சாவூர் 7 சென்டிமீட்டர் பவானிசாகர் பரமக்குடி இளையான்குடி திருமயம் பூந்தமல்லி திருவாடனை நடுவட்டம் ஆறு சென்டிமீட்டர்
 

Follow Us:
Download App:
  • android
  • ios