"மாஸ்க் விலை அதிரடி உயர்வு..! பார்மஸியில் கேட்டாலும் பல இடங்களில் இல்லை..! 

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்ற ஒரு தருணத்தில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்த ஒரு நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் பயன்படுத்தி வரும் மாஸ்க் விலை பன்மடங்கு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ரூபாய் 2க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மூன்று அடுக்கு கொண்ட மாஸ்க் விலை ரூபாய் 22 க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மிகவும் துல்லியமாக வைரஸை கட்டுப்படுத்தக் கூடிய தன்மை கொண்ட N - 95 மாஸ்க் விலை ரூபாய் 90 இல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு மாஸ்க் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தனியார் நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்து வந்த நிலையில் திடீரென விலை உயர்வு ஏற்பட்டு உள்ளதால் இதனை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இந்த ஒரு தருணத்தில் டெல்லியில் தற்போது 31 பேர் வரைகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என உறுதி செய்யப்பட்ட பின்னர் மற்றவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர்.

12 ராசியினரில் "புதிய சொத்து" வாங்கும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா..?

அதன் விளைவாக தற்போது தமிழகத்தில் மாஸ்க் விலை அதிகரித்து உள்ளது. மேலும் மருந்தகங்களில் மாஸ்க் கேட்கும் போது பல இடங்களில் கிடைக்க பெறவில்லை. போதுமான அளவுக்கு மாஸ்க் இல்லாததும் இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.