சென்னையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த பெண்ணுக்கு மார்பு, இடுப்பு, வயிறு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லாரி மோதியதில் உயிரிழந்துள்ள அந்த பெண் ஆலந்தூரைச் சேர்ந்த ஷெர்லி மடோனா (22) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்திய லாரியை அடையாளம் காண முயற்சித்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.