கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயானுக்கு விதிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை மேலும் வேகமாக கார் ஓட்டிக் டிப்பர் லாரியில் மோதி மனைவி மற்றும் குழந்தைகள் பலியானது, தெகல்கா ஆசிரியருடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சயனை கோவை மத்திய சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;- அந்த பெண்ணின் அழகை பார்த்ததுமே ஜிவ்வுன்னு இருந்துச்சு... வீடு புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியர்..!

இந்நிலையில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி சயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் விபத்தில் மனைவியும், பிள்ளையும் பறிகொடுத்த சம்பவத்தில் தன் மீதான குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி குறித்து பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைந்திருப்பதாகவும் மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கைதான சயனுக்கு எதிராக குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவு செல்லாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.