Asianet News TamilAsianet News Tamil

இன்னும் சற்று நேரத்தில் அனல் கிளப்பும் அதிர்ச்சி... மாலை 4 மணி வரை வெளியே போகாதீங்க மக்களே..!

வட தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் அனல் காற்று வீச இருப்பதால் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

heat waves to continue in north tamilnadu
Author
Tamil Nadu, First Published Jun 20, 2019, 10:58 AM IST

வட தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் அனல் காற்று வீச இருப்பதால் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. heat waves to continue in north tamilnadu

அதன்படி வடதமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் அனல் காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசப்போகிறது. எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும். அதேநேரம் தென்மேற்குப் பருவமழை காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. heat waves to continue in north tamilnadu

வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் அடுத்த 3 நாள்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. இதேபோன்று, தென் அரபிக்கடல் பகுதியில் பருவமழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. heat waves to continue in north tamilnadu

தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 107 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூரில் தலா 105 டிகிரி, மதுரை தெற்கில் 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, கடலூர், பரங்கிபேட்டை, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, கரூர்பரமத்தி, பாளையங்கோட்டையில் தலா 101 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios