Asianet News TamilAsianet News Tamil

ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் பலி… - வைராகும் புகைப்படத்தால் சோகம்

அமெரிக்காவில் அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய தந்தை, மகளுடன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் ஏராளமானோர் இறக்கின்றனர். ஆனால், தண்ணீரால் தந்தை, மகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Father and daughter killed in river drowning
Author
Chennai, First Published Jun 27, 2019, 1:18 PM IST

அமெரிக்காவில் அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய தந்தை, மகளுடன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் ஏராளமானோர் இறக்கின்றனர். ஆனால், தண்ணீரால் தந்தை, மகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Father and daughter killed in river drowning

எல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின்ஸ். இவரது மனைவி டானியா வனீசா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா (2) மகள் உள்ளார். 3 பேரும் கடந்த வாரம் வேலை தேடி, அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தனர். இதற்காக ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்த அவர்கள், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு கடந்த 23ம் தேதி சென்றடைந்தனர்.

அங்கு, சர்வதேச எல்லையில் உள்ள பாலம் மூடப்பட்டு இருந்தது. மறுநாள் தான் அதன் வழியே செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அங்கு காத்திருக்க தயங்கிய அவர்கள், அங்குள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்தால், அமெரிக்காவுக்கு சென்றுவிடலாம் என முடிவு செய்தனர்.

Father and daughter killed in river drowning

இதையடுத்து, மார்ட்டின்ஸ், மகளை, தனது சட்டைக்குள் மறைத்து சுமந்தபடி நீச்சலடித்து கொண்டே சென்றார். மறுகரையில் உள்ள டெக்சாஸ் பிரவுன்வில்லி நகரை நெருங்க முடியாமல், ஆற்றின் சூழலில் சிக்கி கொண்டனர். இதனை பார்த்த அவரது மனைவி அவோலியா மெக்சிகோ கரைக்கு திரும்பிவிட்டார். மார்ட்டின்சும், அவரது சட்டைக்குள் இருந்த வலேரியாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தந்தை, மகள் சடலமாக கரை ஒதுங்கிய புகைப்படம், மெக்சிகோ நாளிதழில் வெளியானது. பின்னர் சர்வதேச அளவில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2015ம் ஆண்டு சிரியாவில் இருந்து சென்றபோது, படகு கவிழ்ந்த விபத்தில், 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய படம் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, இந்த படமும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகம் முழுவதும், எல்லை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சிக்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios