Asianet News TamilAsianet News Tamil

பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சீல்!

கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்ததாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு மருந்துத்துறை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது

Directorate of Health Rural Services sealed Cadence Hospital for Sex diagnosis in womb and abortion smp
Author
First Published May 24, 2024, 5:41 PM IST | Last Updated May 24, 2024, 5:41 PM IST

சட்ட விரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது மற்றும் உரிய அனுமயின்றி மனநோய் (Psychiatric) சார்ந்த சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான புகார் மனுவின் மீது சென்னை கோடம்பாக்கம், ஆற்காடு ரோடு பகுதியில் அமைந்துள்ள Cadence மருத்துவமனைக்கு தமிழ்நாடு மருந்துத்துறை சீல் வைத்துள்ளது.

இதுதொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதியன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மற்றும் மருத்துவர் களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட  புகாரின் அடிப்படையில், மாநில அமலாக்க அலுவலர், PCPNDT ACT, 1994/TNCEA-1997 & மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இரா.இளங்கோ மகேஸ்வரன் ஆணைப்படி, இணை இயக்குநர் (சட்டம்) தலைமையில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் தேசிய சுகாதார திட்ட மாவட்ட மனநல மருத்துவர், ஆகியோரைக்கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

விசாரணை குழுவினர் கடந்த மே மாதம் 2ஆம் தேதி மேற்கொண்ட நேரடி ஆய்வில் மேற்காணும் மருத்துவமனையில் ஸ்கேன் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் மருத்துவர் முரளி உரிய அனுமதியின்றி ஸ்கேன் செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், மேலும் கர்ப்பிணி பெண்களிடம் பெறக்கூடிய Form-F முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது.

வாக்குப்பதிவு விவரங்கள் மனு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இதுபற்றி, மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர், PCPNDT Act, 1994 உரிய விளக்கம் கோரினார். அதற்கு மே 17ஆம் தேதி Cadence மருத்துவமனை விளக்க கடிதம் அளித்தது. ஆனால், அக்கடிதம் குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும் திருப்தியின்றியும் அமைந்தது.

அதனைத் தொடர்ந்து விசாரணைக் குழுவானது கடந்த மே மாதம் 23ஆம் தேதியன்று Cadence மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் மருத்துவமனையில்  நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை என்பதும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம்- 1997 சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும், மேலும் உரிய அனுமயின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.

அத்துடன், அந்த மருத்துவமனை மனநல பாதுகாப்பு சட்டம் - 2017, அத்தியாயம் 10, பிரிவு-65(1)ன் கீழ் மனநல மருத்துவம் அளிக்க மாநில மனநல அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் மனநல சிகிச்சை மேற்கொண்டது கண்டறியப்பட்டது.  மேலும், மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகளில் (Generator, Defibrillator and Ventilator in emergency department) குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தும்) சட்டம், 1997 விதி 5(1)-ன் கீழ் பொது மக்களின் நலன் கருதி Cadence மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழ் தற்காலிகமாக நீக்கம் (Temporary Cancellation) செய்ய ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios