சென்னை மாநகர போலீசில் கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு நீரிழிவு மற்றும் இரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவர்களுக்கு எந்த விதியும் வழங்காமல் ஓய்வு தரும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால்  போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புயல் காற்று மழை உள்ளிட்ட எந்த இயற்கை பேரிடர்களின் போது முதலில் களத்தில் இறங்குவது போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்களும் தான். போராட்டங்கள் பந்து உள்ளிட்ட காலங்களின் போது போலீஸ் அதன் பொதுச் சொத்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி உள்ளது. இதனால் போலீசாருக்கு மட்டும் டூட்டி நேரம் என்றில்லாமல் உயர் அதிகரிகள் அழைக்கும்  போது உடனடியாக டூட்டிக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டமும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் நடமாடுவதை தடுக்க போலீசார் ரோந்து பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போது பொதுமக்களை தடுக்கும் போதும், வயதான போலீசாருக்கு கொரோனா நோய் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் பல போலீசார் பயத்துடனே பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சுதாகர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், 144 தடை உத்தரவு  சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் பெருமளவு குறைந்து விட்டது. எனவே ரோந்து பணியில் அதிக அளவிலான போலீஸார் ஈடுபடுத்த வேண்டாம் முக்கிய சந்திப்புகள் மற்றும் போலீசை எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதேபோல் ஒவ்வொரு ஸ்டேஷன்களுக்கும் பாதுகாப்பு என்று ஆயுதபடை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ரோந்து பணிக்கும், பாதுகாப்பு பணிக்கும் பயன்படுத்தலாம். 

இதேபோல இரவு பணிக்கும் 2 நாட்கள் தொடர்சியாக  யாரையும் பயன்படுத்தக்கூடாது. 2 நாட்கள் இரவு பணி வழங்கப்படுவதாக இருந்தால் 3 நாட்கள் இடைவெளியில் தான் வழங்க வேண்டும். மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் எந்த பணியும் வழங்காமல் அவர்களின் வீட்டில் ஓய்வெடுக்க அனுமதியுங்கள். குறிப்பாக ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு போலீசார் இந்த பணி வழங்கக் கூடாது. அதே நேரம் போலீசார் வெளியூர் செல்லக் கூடாது.  போன் சுவிட்ச் ஆப் செய்ய கூடாது. யாராவது ஒரு போலீசாருக்கு நோய் தாக்குதல் ஏற்படும். வயதானவர்கள்தான் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதால், 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் அனுமதி தராமல் ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.