அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூர் அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மன்னூர்ப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் மருதுராஜ்(35) பிரபாகரன்(35) ஆகிய இருவரும் பெங்களூருவில் இருந்து மூன்று  இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது. தெரியவந்தது.

 

இதையடுத்து மூன்று பெண்களை மீட்ட காவல் துறையினர் மருதுராஜ் மற்றும் பிரபாகரன் ஆகிய இரண்டு புரோக்கர்களையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்த காவல்துறையினர் மூன்று இளம் பெண்களையும் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர் பட்டப்பகலில்  வெளிமாநில பெண்களை வைத்து தொழில் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Exclusive Interview : என்னை எதிர்க்க முடியாமல் அதைச்செய்ததே திருமா குண்டாஸ்தான்... ஆதாரத்தை வைத்து கொதிக்கும் காயத்ரி ரகுராம்..!