குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையாக வெடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், வண்ணாரப்பேட்டையில் 21-வது நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- ஆசை வார்த்தை கூறி ரூம்போட்டு வெறிதீர உல்லாசம்... நர்சை நம்பவைத்து ஏமாற்றிய பூக்கடை ஓனர்.!

இந்நிலையில், திருப்பூரில் சட்டவிரோதமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வந்த போது சிஏஏக்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  குடியுரிமை திருத்த சட்டம்.. மோடிக்கு எதிராகவும்.. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் ஐ.நா. எடுத்த அதிரடி முடிவு..!

இதனை விசாரித்த நீதிபதிகள் அனுமதியின்றி போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்? போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என டிஜிபி மற்றும் காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.