Asianet News TamilAsianet News Tamil

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கப்போறீங்களா..? இனி சிக்கல் தான்... வங்கிகள் அதிரடி வியூகம்..!

ஏ.டி.எம். மோசடிகளை தடுக்க இனி 6 முதல் 12 மணிக்கு நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 

ATMs might soon place 6-12 hour gap... cash withdrawals
Author
Delhi, First Published Aug 28, 2019, 1:43 PM IST

ஏ.டி.எம். மோசடிகளை தடுக்க இனி 6 முதல் 12 மணிக்கு நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 

ஏ.டி.எம்.களில் பண மோசடியை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து  டெல்லியில் பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோசடிகளை தடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பெரும்பாலான ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவில் தான் நடைபெறுகின்றன. அதுபோன்ற சமயங்களில், முதல் முறை பணம் எடுப்பதற்கும், 2-வது முறை பணம் எடுப்பதற்கும் இடையே 6 - 12 மணி நேரம் இடைவெளி விதிக்கப்பட்டால் மோசடிகள் குறையும் என்று ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் சிஇஓவுமான முகேஷ் குமார் ஜெயின் கூறியுள்ளார்.

 ATMs might soon place 6-12 hour gap... cash withdrawals

இப்படி குறிப்பிட்ட நேரத்தை கணக்கிட்டு அறிவிப்பது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த இரு கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டால், ஏ.டி.எம். மோசடியை தடுக்க முடியும் என்று நினைக்கிறோம். ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்த பின் இந்த நடைமுறை அமலுக்கு வர வாய்ப்புள்ளது. ஒரு வேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏ.டி.எம்.களைப் பயன்படுத்தி பணம் எடுக்க முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது. ATMs might soon place 6-12 hour gap... cash withdrawals

இதுபோன்று பல்வேறு திட்டங்களையும் வங்கிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டது. அதில், ஏ.டி.எம்.மில் பணமெடுக்கும் போது, பணப்பரிமாற்றம் செய்யும் போது நடைமுறையில் இருப்பது போன்று செல்போனில் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி பதிவு செய்வது என்ற விதியும் பரிசீலிக்கப்பட்டது. கடந்த 2018-19-ம் நிதியாண்டில் டெல்லியில் மட்டும் 179 ஏ.டி.எம். மோசடிகள் நடந்துள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 233 சம்பவங்கள்  நடந்துள்ளன. இதற்கு அடுத்த நிலையில் 2-வது  இடத்தில் டெல்லி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios