Asianet News TamilAsianet News Tamil

வெறிச்சோடும் சென்னை ஏர்போர்ட்..! 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்து..!

இந்தியாவின் முக்கிய விமான நிலையமான சென்னையில் கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்தாகி இருகின்றன. சென்னையில் இருந்து துபாய், கொழும்பு, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் சிங்கர் ஏர்லைன்ஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, குவைத் ஏர்வேஸ், லூப்தான்சா மற்றும் பாடிக் ஏர் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளன.

90 flights were canceled in past 11 days in Chennai due to corona virus
Author
Chennai International Airport (MAA), First Published Mar 14, 2020, 1:16 PM IST

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான்,தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.

90 flights were canceled in past 11 days in Chennai due to corona virus

இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 80க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

மழழையர் பள்ளி விடுமுறை ரத்து..! அரசு திடீர் அறிவிப்பு..!

90 flights were canceled in past 11 days in Chennai due to corona virus

கொரோனா குறித்த அச்சம் காரணமாக விமானங்களில் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்து விட்ட நிலையில் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய விமான நிலையமான சென்னையில் கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்தாகி இருகின்றன. சென்னையில் இருந்து துபாய், கொழும்பு, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் சிங்கர் ஏர்லைன்ஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, குவைத் ஏர்வேஸ், லூப்தான்சா மற்றும் பாடிக் ஏர் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, கொரோனோ அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்ததன் காரணமாகவே விமான சேவை ரத்தாகி இருக்கிறது என்றனர்.

இதனிடையே இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்காக விமான நிலைய வளாகத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios