சென்னை ஆவடியில் இருக்கிறது காமராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளனமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். அதன்பிறகு இரவு வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவிகளை எங்கும் காணவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சார்பாக ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகர காவல்துறையில் இருந்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் மாணவிகள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். 

ஒரே நேரத்தில் மாணவிகள் 4 காணாமல் போயிருக்கும் சம்பவம் பள்ளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவிகள் பயின்ற வகுப்பில் இருக்கும் சக மாணவிகளிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Also Read: தனியாக கழண்டு ஓடிய சொகுசு பேருந்து டயர்..! பயங்கர அதிர்ச்சியுடன் உயிர் தப்பிய பயணிகள்..!