ஐபிஎல்லை பொறுத்தமட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான எதிரி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான்.

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்ந்துவருகின்றன. இரு அணிகளும் மூன்று முறை இறுதி போட்டியில் பலப்பரீட்சை செய்துள்ளன. அவற்றில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோப்பையை வென்றுள்ளன.

அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பதும் இந்த இரு அணிகள் தான். இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனியின் மகள் ஸிவா தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகையாக மாறிவிட்டார்.

தோனியின் மகள் ஸிவாவின் வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாவது வழக்கம். சென்னை அணிக்கு ஆதரவாக ஸிவா பேசும் வீடியோவும் சென்னை அணியை உற்சாகப்படுத்தும் வீடியோவும் உலாவந்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக ஸிவா தோனி குரல் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய வீரர்கள், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது, மும்பை இந்தியன்ஸ் என ஸிவா தோனி அந்த அணிக்கு ஆதரவாக குரல் எழுப்பும் வீடியோவை அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

We have a new @mipaltan fan in the house yo!! @msdhoni @SaakshiSRawat pic.twitter.com/yasd7p6gHj
— Rohit Sharma (@ImRo45) July 21, 2018

வழக்கம்போலவே ஸிவா தோனியின் இந்த வீடியோவும் வைரலாக பரவிவருகிறது.