ஹர்திக் பாண்டியாவை தோனியின் மகள் ஸிவா தோனி உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பகிர்ந்து, தனக்கு சியர்லீடர் கிடைத்து விட்டதாக பாண்டியாவும் பதிவிட்டுள்ளார்.

தோனியின் மகள் ஸிவா தோனியின் வீடியோவும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ராகுலும் ரெய்னாவும் அதிரடியாக ஆடி முறையே 70 மற்றும் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு மனீஷ் பாண்டே மந்தமாக ஆடிக்கொண்டிருக்க, கடைசி ஓவர்களில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, 9 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 32 ரன்களை குவித்தார்.