உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் வரும் 6-ஆம் தேதி (அதாவத்ஹு வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகின்றன.

விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் கடந்த ஜூன் 14-ஆம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.  32 அணிகள் பங்கேற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 16 அணிகள் வெளியேறியன. 

இந்த நிலையில் ஏனைய 16 அணிகள் தகுதி பெற்ற ரௌண்ட் 16 எனப்படும் நாக் ஔட் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.  இதில், அர்ஜென்டீனா, போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. 

அதன்படி, உலகக் கோப்பையின் முக்கிய கட்டமான காலிறுதி ஆட்டங்கள் வரும் 6-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. 

இதில், உருகுவே - பிரான்ஸ் அணிகள் மோதும் முதல் காலிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நிஷ்னி நோவ்கோகிராட் மைதானத்தில் நடைபெறும். 

அதேபோன்று, கஸான் மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணிக்கு ஐந்து முறை சாம்பியன் வென்ற பிரேஸில் மற்றும் பெல்ஜியம் அணிகள் காலிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் 7-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு சோச்சி பிஷ்ட் மைதானத்தில் மோதுகின்றன.