பத்து நாடுகள் மோதும் மகளிர் உலகக் கோப்பை டி-20 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நவம்பர் 9-ஆம் தேதி தொடங்குகிறது.

பத்து நாடுகள் மோதும் மகளிர் உலகக் கோப்பை டி-20 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளின் மூன்று நகரங்களில் நடைபெற இருக்கிறது.

நவம்பர் 9 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிற இருக்கும் இந்தப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, குவாலிபையர் 1 உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

மூன்று முறை சாம்பியன் வென்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, குவாலிபையர் 2, இந்தியா ஆகிய அணிகள் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. 

இதற்கான உலகக் கோப்பை தகுதி ஆட்டங்கள் நெதர்லாந்தில் ஜூலை 7 முதல் 14-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, உகாண்டா, ஐக்கிய அரபு அமிரக அணிகள் இடம் பெற்றுள்ளன.  இதில் முதலிரண்டு இடங்களை பெறும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். 

இந்திய அணி கயான தேசிய மைதானத்தில் நவம்பர் 11-ஆம் தேதி பாகிஸ்தானையும், 15-ஆம் தேதி குவாலிபையர் 2 அணியையும், 17-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியையும் எதிர்கொள்கிறது.

ஆன்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நவம்பர் 22-ஆம் தேதி இரு அரையிறுதி ஆட்டமும், 24-ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறும்.c