Asianet News TamilAsianet News Tamil

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வென்ற வீரர்கள் இவர்கள்தான்...

Wimbledon tennis tournament was the first player to win ...
Wimbledon tennis tournament was the first player to win ...
Author
First Published Jul 4, 2018, 12:09 PM IST


விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், முகுருஜா உள்ளிட்ட பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2–வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் மற்றும் இஸ்ரேலின் துடிசெலா மோதினர்.

இதில், 6–3, 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் துடிசெலாவை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார் நடால். 

அதேபோன்று, 7–ஆம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக் திம் சைப்ரஸின் பாக்தாதிசுடன் மோதினார். இதில், 4–6, 5–7, 0–2 என்ற செட் கணக்கில் பின்தங்கி இருந்தபோது டொமினிக் முதுகு வலி காரணமாக விலகினார். இதனால் பாக்தாதிஸ் 2–வது சுற்றை எட்டினார்.

அதேபோன்று ஒற்றையர் பிரிவில் களம் இறங்கிய இந்தியரான யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் 6–2, 3–6, 3–6, 2–6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் வீழ்ந்து 5–வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறினார்.

அதே சமயம் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ, இங்கிலாந்தின் கைல் எட்மன்ட் உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 

அதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்பின் முகுருஜா  6–2, 7–5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் நவோமி பிராடியை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். 

ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், சுலோவக்கியாவின் சிபுல்கோவா, இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios