வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஷெல்டன் கோட்ரல், வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மோசமான பந்து ஒன்று வீசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒருநாள் தொடரை வங்கதேச அணியும் வென்றுள்ளன. 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆண்ட்ரே ரசல் ஆடாததால், அவருக்கு பதிலாக ஷெல்டன் கோட்ரல் அணியில் சேர்க்கப்பட்டார். 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு முதல் ஓவரை கோட்ரல் வீசினார். முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமாக வீசினார் கோட்ரல். கோட்ரல் வீசிய அந்த பந்து தரையில் பிட்ச் ஆகாமல் நேரடியாக இரண்டாவது ஸ்லிப் ஃபீல்டருக்கும் அப்பாற்பட்டு சென்றது. அந்த பந்திற்கு அம்பயர் நோபால் வழங்கினார். 

கிரிக்கெட் வரலாற்றில் வீசப்பட்ட மோசமான பந்துகளில் இதுவும் ஒன்று. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffoxsportsaus%2Fvideos%2F2089133344431794%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>