Asianet News TamilAsianet News Tamil

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார் விராட்கோலி… குடியரசுத் தலைவர் வழங்கினார் !!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளு தூக்குதல் வீராங்கணை  மீரா பாய்  சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியருசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Virat khli get khel rathna award from president
Author
Delhi, First Published Sep 25, 2018, 11:17 PM IST

விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட்  வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது.

இதே போல, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், பளுதூக்கும் வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது.

Virat khli get khel rathna award from president

இந்நிலையில் இன்று டெல்லி குடியரசுத் தலைவர்  மாளிகையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.. விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இதன் பின்னர், அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தங்களது விருதுகளை குடியரசுத் தலைவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios