நேற்று லண்டனில் நடந்த இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் மேட்சைக் கண்டுகளிக்க வந்த கடன்காரர் விஜய் மல்லையாவை நோக்கி ரசிகர்கள் ‘திருடன், திருடன்’என்று கூச்சலிட்டதால் அவர் அவமானம் தாங்க முடியாமல் பாதியில் வெளியேறிய வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ. 9,000 கோடி கடன் பெற்று தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.  மேற்கொண்டு வருகிறது. மேற்கொண்டு வருகிறது.மேற்கொண்டு வந்துகொண்டேயிருக்கிறது. இடையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கினார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும், உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விஜய் மல்லையா  அந்தப்போட்டியை காண்பதற்கு வந்திருந்தார். அவரை பார்த்தவுடன் நிருபர்கள் சூழ்ந்து பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது ''நான் இங்கு கிரிக்கெட் பார்க்கவே வந்தேன்,'' என்று கூறிவிட்டு மைதானத்துக்குள் வேகமாக சென்றுவிட்டார்.

உள்ளே ஸ்டேடியத்துள் வந்த அவரை அடையாளம் கண்டுகொண்ட இந்திய ரசிகர்கள் ‘திருடன் திருடன்’ என்று அவரைக் கேவலப்படுத்தியதோடு இன்னும் சில அசிங்கமான கெட்டவார்த்தைகளில் அவமானப்படுத்தினார்கள். ஒரிஜினர் இந்தியர்களை விட வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ரொம்பவும் கோபக்காரர்களாக இருக்கிறார்களே என்பதை உணர்ந்துகொண்ட மல்லையா உடனே ஸ்டேடியத்தை விட்டு வெளியேறினார்.