பிரபல ரெஸ்ட்லரான அண்டர்டேக்கர், ரெஸ்ட்லிங்கிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

மார்க் காலவே என்ற இயற்பெயர் கொண்ட அண்டர்டேக்கர், 1990ம் ஆண்டு உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கில்(WWE) ரெஸ்ட்லராக அறிமுகமானார். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச அளவிலான ரெஸ்ட்லிங் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். 

அண்டர்டேக்கர், சண்டை மேடைக்கு பைக்கில் வரும்போதே மிரட்டலாக இருக்கும். உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் அண்டர்டேக்கர். கடைசியாக ரெஸில்மேனியா 36ம் பதிப்பில் விளையாடினார் அண்டர்டேக்கர். ரெஸில்மேனியாவில் இதுவரை அவர் ஆடியுள்ள 27 போட்டிகளில் 25ல் வெற்றி பெற்றுள்ளார். 

1990ம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய அண்டர்டேக்கர், தான் ரெஸ்ட்ங்லிருந்து ஒதுங்குவதற்கு இதுவே சரியான நேரம் என முடிவெடுத்துள்ள அண்டர்டேக்கர், இனிமேல் ரெஸ்ட்லிங் மேடை ஏறுவதில்லை என தனது ஆவணப்படமான ”தி ஃபைனல் ரைட்”-ல் தெரிவித்துள்ளார். 

மீண்டும் ரெஸ்ட்லிங் மேடையேறும் எண்ணம் எனக்கில்லை. இனிமேல் ஜெயிப்பதற்கோ சாதிப்பதற்கோ எனக்கு எதுவும் இல்லை. ஆட்டம் மாறிவிட்டது. புதியவர்களுக்கான நேரம் இது என்று சொல்லி தனது ஓய்வை அறிவித்துள்ளார் அண்டர்டேக்கர். 

இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி, அண்டர்டேக்கரை கௌரவப்படுத்தும் விதமாக டுவீட் செய்துள்ளது. 30 லெஜண்ட்ரி ஆண்டுகள் என பதிவிட்டு அண்டர்டேக்கரை பாராட்டியுள்ளது.