சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி இருந்து வந்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரது சிக்ஸர் சாதனையை சமன் செய்துள்ள கிறிஸ் கெய்ல், விரைவில் அஃப்ரிடியை முந்த உள்ளார்.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய முதல் 5 வீரர்களை பார்ப்போம்..

1. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து போட்டிகளையும் சேர்த்து 443 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல், 476 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

2. ஷாகித் அஃப்ரிடி (பாகிஸ்தான்)

சிக்ஸர்களுக்கு பெயர் போனவர் அஃப்ரிடி. பூம் பூம் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். 534 போட்டிகளில் ஆடி 476 சர்வதே சிக்ஸர்களை விளாசியுள்ளார் அஃப்ரிடி. 

3. பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான பிரண்டன் மெக்கல்லம் 432 போட்டிகளில் ஆடி 398 சிக்ஸர்களை விளாசி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

4. சானத் ஜெயசூர்யா (இலங்கை)

இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரர் சானத் ஜெயசூர்யா, 586 சர்வதேச போட்டிகளில் ஆடி 352 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

5. தோனி (இந்தியா)

சிறந்த ஃபினிஷர் என பெயர்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 342 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார். 504 சர்வதேச போட்டிகளில் ஆடி, 342 சிக்ஸர்களை விளாசியுள்ளார் தோனி.