Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics ஜூலை 26: இந்திய வீரர்கள் கலந்துகொண்ட விளையாட்டு போட்டிகளின் முடிவுகள்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் 3ம் நாளான இன்று(ஜூலை 26) இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடிய ஆட்டங்களின் முடிவுகளை பார்ப்போம்.
 

tokyo olympics results of indian performance on july 26
Author
Tokyo, First Published Jul 26, 2021, 8:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

டோக்கியோ ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3ம் நாளான இன்றைய(ஜூலை 26) முடிவில் 8 தங்கம் உட்பட மொத்தம் 13 பதக்கங்களை வென்ற ஜப்பான் பதக்க பட்டியலில் முதலிடத்திலும், 7 தங்கத்துடன் மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்கா 2ம் இடத்திலும், 6 தங்கம் உட்பட மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ள சீனா 3ம் இடத்திலும் உள்ளன.

இந்தியா ஒரேயொரு வெள்ளி பதக்கத்துடன் 33வது இடத்தில் உள்ளது. மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டுமே இந்தியா வென்றது. வேறு எந்த விளையாட்டிலும் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக்கின் 3ம் நாளான இன்று(ஜூலை 26) இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடிய விளையாட்டு போட்டிகளின் முடிவுகளை பார்ப்போம்.

வில்வித்தை:

கொரியாவிடம் வில்வித்தை காலிறுதியில் இந்தியா தோற்றது.

வாள்சண்டை: 

மகளிருக்கான வாள்சண்டை 32வது சுற்றில் ஃப்ரான்ஸ் வீராங்கனை மனன் ப்ரூனெட்டிடம் தோல்வியடைந்தார் இந்தியாவின் பவானி தேவி.

டேபிள் டென்னிஸ்:

ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சரத் கமல்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுதிர்தா முகர்ஜி தோல்வியடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் மனிகா பத்ரா தோல்வியை தழுவினார்.

பேட்மிண்டன்:

ஆடவர் இரட்டையர் க்ரூப் ஸ்டேஜில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் இணை, இந்தோனேஷிய இணையிடம் நேர்செட் கணக்கில் தோற்றது.

துப்பாக்கி சுடுதல்:

தகுதிச்சுற்றில் இந்தியாவின் அங்கத் வீர்சிங் பாஜ்வா மற்றும் அகமது கான் தோல்வியடைந்தனர்.

டென்னிஸ்:

ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

பாக்ஸிங்: 

ஆடவர் குத்துச்சண்டை மிடில்வெயிட்(69-75 கிலோ) பிரிவில் ஆஷிஷ் குமார் சௌத்ரி தோல்வியடைந்தார்.

ஹாக்கி:

மகளிர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியிடம் 2-0 என்ற கோல்கணக்கில் இந்தியா தோற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios