இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் கோலி எப்போதும் மனைவி அனுஷ்காவுடன் சுற்றி வருவதால் கோலி என்ன ஹனிமூனுக்கா அங்கு சென்றுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவரும் ஜாலியாக போஸ் தரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவருக்கு தற்போது 30 வயது. நீண்ட காலமாக, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை விராட் கோலி, காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் இத்தாலி சென்று, 2 பேரும் திருமணம் செய்துகொண்டனர். 

திருமணம் முடிந்தபின், 2 பேரும் வாழ்வதற்காக, மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட வீடு ஒன்றை விராட் கோலியும், அனுஷ்காவும் கட்டி வருகின்றனர். விராட் கோலியை விட அவரது ஹேர் ஸ்டைல் இளைஞர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றுள்ளது. திருமணம் முடிந்தாலும் அந்த ஹேர் ஸ்டைலை விராட் கோலி இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கேப்டன் விராட் கோலிக்கு ஊக்கம் தரும் வகையில், அனுஷ்கா சர்மாவும் கூட சென்றுள்ளார். கிரிக்கெட் போட்டிகள் இல்லாதபோது, 2 பேரும் அவ்வப்போது வெளியே சுற்றி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதையொட்டி, கோலியும், மனைவி அனுஷ்காவும் ஒய்யாரமாகவும், முத்தம் தருவதைப் போலவும் போஸ் தரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

2 பேரும் முத்தம் தருவதைப் போல இருக்கும் புகைப்படத்தை, ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி முதலில் பதிவிட்டார். அதில், ‘’எனது அழகான ராட்சஸியுடன் ஒருநாள்,’’என கோலி குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, அனுஷ்கா சர்மாவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், கோலியின் பின்புறமாக நின்று, அவரை நெருக்கமாக அணைத்தபடி அனுஷ்கா நிற்கிறார். புகைப்படம் பற்றி கோலி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், நீலநிற இதயம் போன்ற எமோஜியை அவர் பதிவிட்டுள்ளார். இவ்விரு புகைப்படங்களுக்கும் சமூக ஊடகங்களில் அதிக லைக்ஸ், ஷேரிங் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் சில ரசிகர்கள் இங்கிலாந்து சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு பதில் கோலி என்ன அனுஷ்காவுடன் ஹனிமூன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.