இப்படியும் சில ரசிகர்கள்: இறந்தவரது உடலை வீட்டில் வைத்துக் கொண்டு போட்டியை பார்த்த குடும்பம் – வைரல் வீடியோ!
இறந்தவரது உடலை வைத்துக் கொண்டு சிலி மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்த குடும்பத்தினரது வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரானது தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற சிலி மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இறந்தவரது சடலத்தை வீட்டில் வைத்துக் கொண்டே தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பத்தினர் இந்தப் போட்டியை பார்த்து ரசித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியை குடும்பத்தோடு இணைந்து கால்பந்து ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து ரசித்துள்ளனர். இதனை டாம் வாலண்டினோ என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ 18 விநாடிகள் மட்டுமே ஓடுகிறது. அந்த வீடியோவில் இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து கொண்டு புரக்ஜெக்டர் மூலம் பெரிய திரையில் போட்டியை பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அந்த வீடியோவில் சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களது ஜெர்சி கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ஃபெனா மாமா எங்களுக்கு கொடுத்த மகிழ்ச்சியான தருணங்களுக்கு உங்களுக்கு நன்றி. உங்களையும், உங்களது காண்டோரியன் குடும்பத்தையும் நினைவில் வைத்துக் கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய வீடியோவாக இருந்தாலும் இப்போது டிரெண்டாகி வருகிறது. அதோடு, இப்படியும் சில ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ சுட்டிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.