Asianet News TamilAsianet News Tamil

செர்பியாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது சுவிட்சர்லாந்து அணி... என்ன ஒரு திரில் ஆட்டம்...

Switzerland beats serbia
Switzerland beats serbia
Author
First Published Jun 23, 2018, 3:52 PM IST


உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் அசத்தல் ஆட்டத்தால் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சுவிட்சர்லாந்து அணி.

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நேற்றிரவு 34-வது தரவரிசையிலுள்ள செர்பியா அணி மற்றும் 6-வது தரவரிசையிலுள்ள சுவிட்சர்லாந்து அணி மோதின. 

ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே செர்பியா அணியின் வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிக் கோல் அடித்தார். ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் வீரர் க்ரானிட் ஷாகா தனது அணி சார்பாக முதல் கோல் அடித்தார். 

இதனிடையே ஆட்டம் சமனில் முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சுவிட்சர்லாந்து அணியின் வீரர் ஷாக்ரி 90-வது நிமிடத்தில் மற்றொரு  கோல் அடித்தார். இதனால், சுவிட்சர்லாந்து ரசிகர்கள் துள்ளி குதித்தனர்.

ஆட்டத்தின் இறுதியில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தியது. சுவிட்சர்லாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios