இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
 
இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான சிந்து தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில், உலகின் 17-ஆம் நிலை வீராங்கனையான அயா ஒஹோரியை எதிர்கொண்டார். 

இதில், 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் சிந்து.

இந்த ஆட்டத்தை 36 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்தார் சிந்து.

இதுவரை ஒஹோரியை ஐந்து முறை சந்தித்துள்ள சிந்து அனைத்திலும் வெற்றிக் கண்டுள்ளார்.
 
அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் 21-23, 21-15, 21-13 என்ற செட்களில் உலகின் 17-ஆம் நிலை வீரரும், சீன தைபேவைச் சேர்ந்தவருமான வாங் ஹி வெய்யை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.