கேலோ இந்தியாவில் குடும்ப வெற்றி: உறவினர் எஸ்.எம்.யுகனுடன் இணைந்து வெள்ளி வென்ற நிலா ராஜா பாலு!
கேலோ இந்தியாவில் இன்று நடந்த கலப்பு ட்ராப் போட்டியில் நிலா ராஜா பாலு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் 6ஆவது சீசன் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்) உள்பட 26 விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த சீசன் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தான், இன்று சென்னையில் அல்மாடியில் உள்ள சிவந்தி ஆதித்தன் ஷூட்டிங் ரேஞ்ச் பகுதியில் துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில், திமுக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு பங்கேற்று விளையாடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
அவர் மட்டுமின்றி அவரது உறவினரான எஸ்.எம் யுகனும் இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இரண்டு முறை தேசிய சாம்பியானன நிலா ராஜா பாலு சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திறமை வாய்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையான நிலா, இன்று நடந்த கலப்பு ட்ராப் போட்டியில் இடம் பெற்று விளையாடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். அவர் மட்டுமின்றி அவரது உறவினரான எஸ்.எஸ்.யுகனும் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக யுகன் இந்தியாவின் இளம் ட்ராப் ஷூட்டர் என போட்டியில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் இடம் பெற்ற நிலா ராஜா பாலுவிற்கு 2 முறை தேசிய சாம்பியன் என்பது கூடுதல் பலமாக அமைந்தது. திறமை மற்றும் அவரது அர்ப்பணிப்பு இரண்டும் சேர்ந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்ற வைத்தது.
இளைய ட்ராப் ஷூட்டர் என்றவர் முறையில் யுகனின் பங்களிப்பு நிலா ராஜா பாலுவின் வெள்ளிப் பதக்க வெற்றிக்கு வித்திட்டது. நிலா ராஜா பாலுவின் வெள்ளிப் பதக்கம், அவரது உறவினரான எஸ்.எம்.யுகனின் ஆதரவுடன் சாதித்து காட்டியது, அவர்களது தனிப்பட்ட திறன்களை மட்டுமல்ல, விளையாட்டு உலகில் குடும்பத்தின் சக்தியையும் பறைசாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 29 தங்கம், 18 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என்று மொத்தமாக 77 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மகாராஷ்டிரா 37 தங்கம், 32 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என்று மொத்தமாக 109 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. ஹரியானா 29 தங்கம், 16 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என்று மொத்தமாக 84 பதக்கங்களை கைப்பற்றி 3 ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.