Asianet News TamilAsianet News Tamil

மேக்ஸ்வெல் மன்னிப்பு கேட்டே ஆகணும்.. ஒற்றை காலில் நிற்கும் ஷோயப் அக்தர்

shoaib akhtar emphasis maxwell to say sorry to sarfraz
shoaib akhtar emphasis maxwell to say sorry to sarfraz
Author
First Published Jul 9, 2018, 5:02 PM IST

போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவிற்கு கை கொடுக்காமல் சென்றதற்கு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேவில் நடந்தது. இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் என அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

shoaib akhtar emphasis maxwell to say sorry to sarfraz

இதையடுத்து இறுதி போட்டியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஷார்ட் மற்றும் ஃபின்ச் அதிரடியாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஃபின்ச் 47 ரன்களும் ஷார்ட் 76 ரன்களுக்கு குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ் என எந்த வீரரும் சோபிக்காததால், 200 ரன்களை கடக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

shoaib akhtar emphasis maxwell to say sorry to sarfraz

எனினும் 183 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபர்ஹான் மற்றும் அடுத்து களமிறங்கிய டலட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த நெருக்கடியிலும் மற்றொரு தொடக்க வீரரான ஃபகார் ஜமான் அதிரடியாக ஆடி 91 ரன்களை குவித்தார். அவர் சிறப்பாக ஆடி கொடுத்ததால், நடுவரிசையில் களமிறங்கிய வீரர்களுக்கு பணி சற்று எளிதானது. பிறகு பொறுப்பை கையில் எடுத்து ஆடிய ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியை வெற்றியடைய செய்தார். 19.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

shoaib akhtar emphasis maxwell to say sorry to sarfraz

போட்டிக்கு பிறகு வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி முடிந்ததும் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்தனர். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கையை நீட்டியபடி இருக்க, மேக்ஸ்வெல் அவருக்கு கை கொடுக்காமல் சென்றுவிட்டார்.

For those who missed it. This is what happened. pic.twitter.com/nORNAMLTPR
— Taimoor Zaman (@taimoorze) 8 July 2018

பின்னர் அதை அறிந்த மேக்ஸ்வெல், சர்ஃபராஸ் அகமதுவிற்கு கை கொடுக்காமல் சென்றது வேண்டுமென்றே செய்த காரியம் கிடையாது. நான் அந்த மாதிரி நபரும் கிடையாது. சர்ஃபராஸை நான் கவனிக்கவில்லை. அதன்பிறகு இந்த தகவலை அறிந்ததும், அவருக்கு கை கொடுக்க ஹோட்டல் முழுவதும் தேடினேன் என மேக்ஸ்வெல் டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார்.

pic.twitter.com/SIGOiEyOKL
— Glenn Maxwell (@Gmaxi_32) 9 July 2018

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவிற்கு கை கொடுக்காதது தொடர்பாக, வருத்தத்துடன் மேக்ஸ்வெல் விளக்கமளித்த பிறகும், அவர் பாகிஸ்தான் வீரர்களிடமும் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.

Not shaking hands with Pak captain after winning the series its not a great example set by Glen Maxwell plus kids are watching his behaviour & looking up to him. Now-he should apologise to Pak team & Sarfraz ..
— Shoaib Akhtar (@shoaib100mph) 9 July 2018

Follow Us:
Download App:
• android
• ios