ENG vs NZ: shane warne: 23 வினாடி, 23 ஓவர்: ஷேன் வார்னுக்காக இங்கிலாந்து, நியூஸிலாந்து வீரர்கள் புகழாஞ்சலி
shane warne : ENG vs NZ :ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்னுக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. 23வது ஓவரின் போட்டி நிறுத்தப்பட்டு, 23 வினாடிகள் ரசிகர்கள், வீரர்கள் அனைவரும் நின்றிநிலையில் கைதட்டி மரியாதை செலுத்தினர்.
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்னுக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. 23வது ஓவரின் போட்டி நிறுத்தப்பட்டு, 23 வினாடிகள் ரசிகர்கள், வீரர்கள் அனைவரும் நின்றிநிலையில் கைதட்டி மரியாதை செலுத்தினர்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் களமிறங்கியுள்ளது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி, 40ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் மேத்யூ பாட்ஸ், ஆன்டர்ஸன் இருவரும் தலா 4 விக்கெட்டுகளைவீழ்த்தி நியூஸிலாந்து சரிவுக்கு காரணமாகினர். அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்துக்கு நியூஸிலாந்து அணியும் பதிலடி கொடுத்தது.
நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் டிம் சவுதி, போல்ட்,ஜேமிஸன் ஆகியோரின் பந்துவீச்சால், இ்ங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்துள்ளது. பென் ஃபோக்ஸ் 6 ரன்னிலும், பிராட் 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்த ஆட்டத்தின் ஆட்டத்தின் இடையே மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னுக்கு இங்கிலாந்து, நியூஸிலாந்து வீரர்கள், லாட்ஸ் மைதானத்தில் அமர்ந்து போட்டியைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து புகழாஞ்சலி செலுத்தினர்.
அது மட்டுமல்லாமல் லாட்ஸ் மைதானத்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக இருக்கும் ஒரு அரங்கிற்கு, ஷேன் வார்ன் பெயரும் சூட்டப்பட்டது. கடந்த மார்ச் 4ம் தேதி தாய்லாந்து சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஷேன் வார்ன் உயிரழந்தார். அவருக்கு கிரிக்கெட் உலகமே அஞ்சலி செலுத்தியது.
ஷேன் வார்ன் தான் ஆடிய போட்டிகளில் 23எண் கொண்ட ஜெர்ஸியை விரும்பி அனிவார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆட்டத்தின் 23-வது ஓவர் வந்தபோது, ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ரசிகர்கள் எழுந்து நிற்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். லாட்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் ஷேன் வார்னின் சாதனைகள் 23 வினாடிகள் ஒளிபரப்பப்பட்டது. அதன்பின் ரசிகர்கள், நியூஸிலாந்து, இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் எழுந்து 23 வினாடிகள் கரஒலி எழுப்பி ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சர்வதேச அளவில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக வார்ன் இன்னும் இருந்து வருகிறார். 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை ஷேன் வார்ன் வீழ்த்தியுள்ளார்.