ஜிம்பாப்வேவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனியை பின்பற்ற நினைத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மூக்குடைபட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். அவரது கேப்டன்சியில் அந்த அணி மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பிவருகிறது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவாக உள்ள நிலையில், அந்த அணி வலுவான அணியாக மாறி வருகிறது. 

சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியையே அனைத்து வகையிலும் பின்பற்றி வருகிறார். தோனியை போலவே விக்கெட் கீப்பர் - கேப்டனான சர்ஃபராஸ், தோனியை பின்பற்ற விரும்புவதாக ஏற்கனவே அவர் கூறியிருக்கிறார். சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் அந்த அணி, கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

ஜிம்பாப்வேவுடன் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என எளிதாக வென்றது. இந்த தொடரின் 5வது போட்டியில் கேப்டன்சி மற்றும் விக்கெட் கீப்பிங்கை போலவே தோனியை போல பந்துவீச ஆசைப்பட்டு வீசினார். ஆனால் இரண்டு ஓவர்களை வீசிய இவர், தோனியை போல முதன்முதலில் பந்துவீசிய போட்டியில் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டார். ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 48 மற்றும் 50 ஆகிய இரண்டு ஓவர்களை வீசி 15 ரன்களை கொடுத்தார் சர்ஃபராஸ். சர்ஃபராஸ் பவுலிங்கை ஜிம்பாப்வே வீரர் சிக்ஸர் விளாசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/m3aKwU6qez">pic.twitter.com/m3aKwU6qez</a></p>&mdash; Ketan Patil (@KetanPa99513423) <a href="https://twitter.com/KetanPa99513423/status/1021088979112767488?ref_src=twsrc%5Etfw">July 22, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

தோனியை பின்பற்ற நினைத்து மூக்குடைபட்ட சர்ஃபராஸ் அகமதுவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.