Sania Mirza Divorce Statement: சில மாதங்களுக்கு முன்பே விவாகரத்து – உறுதி செய்து சானியா மிர்சா தரப்பு அறிக்கை!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சோயிப் மாலிக் உடனான திருமண உறவு முறிந்து விட்டதாக சானியா மிர்சா குடும்பம் மற்றும் அவரது டீம் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Sania Mirza Family Gives Explanation about Divorce after Shoaib Malik Shared his Marriage Photos with Actress Sana Javed rsk

கடந்த 2010 ஆம் ஆண்டு சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மகன் இஷானுக்கு 5 வயதாகிறது. இந்த நிலையில் தான் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இருவரும் விகாரத்து பெற்றார்களா? இல்லையா என்பது தான் யாரும் அறிந்திராத ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் தான் சோயிப் மாலிக்கின் திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில், சானியா மிர்சா தரப்பிலிருந்து விவாகரத்து குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சானியா மிர்சா தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சானியா மிர்சா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் பொது மக்கள் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளார். எனினும், சோயிப் மாலிக் விவாகரத்து பெற்று சில மாதங்களே ஆன நிலையில், அதனை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

ஷோயப்பின் புதிய பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பிகிறார். இதற்கு வாழ்த்துக்களும் கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் அனைத்து ரசிகர்களும், நலம் விரும்பிகளும் எந்தவிதமான ஊகங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தனி உரிமைக்கான அவரது தேவையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று சானியா மிர்சா குடும்பத்தினர் அண்ட் டீம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios