Asianet News TamilAsianet News Tamil

Australia Open Tennis: இறுதிப் போட்டியில் தோற்று கண்ணீர் வீட்டு அழுது ரசிகர்களையும் அழு வைத்த சானியா மிர்சா!

மெல்போர்னில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் கலப்பு இரடடையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வியடைந்து 2ஆம் இடம் பிடித்துள்ளது.
 

Sania Mirza ends her illustrious Grand Slam career with the runners up in the 2023 Australian Open mixed doubles
Author
First Published Jan 27, 2023, 1:49 PM IST

மெல்போர்னில் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா ஜோடி பிரேசிலைச் சேர்ந்த லூசா ஸ்டெபானி - ரபெல் மெட்டோஸ் ஜோடியுடன் மோதியது. 

விரைவில் ஷோலே 2 கம்மிங்: பழங்கால பைக்கில் ஹர்திக் பாண்டியா, எம் எஸ் தோனி: வைரலாகும் பிக்ஸ்!

தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த லூசா ஸ்டெபானி ஜோடி 7-6(2), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இது அவர்களுக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வெற்றி பெற்ற ஜோடிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ள நிலையில், இது அவரது கடைசி கிராண்ட் ஸ்லாம் என்பதால், இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

 

 

மேடையில் குத்தாட்டம் போட்ட அக்‌ஷர் படேல் - மேகா: சோஷியல் மீடியாவையே அதிர வைக்கும் வீடியோஸ்!

இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது: எனது முதல் டென்னிஸ் வாழ்க்கை கடந்த 2005 ஆம் ஆண்டு மெல்போர்னில் தொடங்கியது. அப்போது எனக்கு 18 வயது. மீண்டும் மீண்டும் இங்கு வந்து பல சாம்பியன்  பட்டங்களை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், எனது கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையை முடிக்க இதைவிட சிறந்த இடமும் இல்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார்.

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷர் படேல்: வைரலாகும் புகைப்படங்கள்!

மெல்போர்ன் இந்திய நட்சத்திரங்களுக்கு அதிர்ஷ்டகரமான இடமாக இருந்து வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கிராண்ட் ஸ்லாம் டைட்டில் வென்றார். அதன் பிறகு 7 ஆண்டுகளுக்குப் பின் சுவிட்சலாந்தின் மார்டினா கிங்கிஸ் உடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு விம்பிள்டன், 2015 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம், 2012 ஆம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் மற்றும் 2014 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் என்று பல பட்டங்களை வென்றுள்ளார். 

கையில் இளநீருடன் டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்த தோனி: ஜெர்சியில் கையெழுத்து வாங்கிய இஷான் கிஷான்!

Hockey World Cup 2023: ஜப்பானை கோலே அடிக்கவிடாமல் 8 கோல்களை அடித்து இந்தியா அபார வெற்றி

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios