மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அகானே யாமாகுசியை எதிர்கொண்டார் இந்தியாவின் சாய்னா நேவால்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் சாய்னா நெவால் 15-21, 13-21 என்ற நேர் செட்களில் தோற்கடிக்கப்பட்டார். ஆட்டம் ஆரம்பித்த 35 நிமிடங்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய  மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மலேசியாவின் யிங் லீயை எதிர்கொள்கிறார்.

யிங் லீ தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ளார் என்பதும் சிந்து 3-வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று., ஆடவர் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டார் என்பது கூடுதல் தகவல்.