தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. அண்மைக்காலமாக  தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.

 

தற்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பதிவில் , சச்சின் வசீகரமானவர். ஒருமுறை ஐதராபாத்துக்கு வந்திருந்தார். அப்போது 'சார்மிங்' ஆன பெண்ணுடன் தொடர்பு கொண்டார். இதற்கு சாமுண்டீஸ்வர் சாமி என்பவர் இடைத்தரகராக செயல்பட்டார். உண்மையில் சச்சின் சிறந்த வீரர் தான், நான் சொல்வது களத்தில் அல்ல, காதலில்' என, தெரிவித்துள்ளார்.

 

இதில் யாருடைய பெயரையும் நேரடியாக கூறவில்லை என்றாலும், பிரபல நடிகை ஒருவரை மறைமுகமாக கூறுவது தெரிகிறது. இந்த பதிவிற்கு சச்சின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் மட்டுமல்ல, மூன்றாம் தலைமுறையினரின் துாண்டுகோலாக உள்ளார். இதுவரை எவ்வித களங்கமும் இல்லாதவர் இவர் மீது புகார் கூற எப்படி இந்தளவுக்கு தைரியம் வந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

நாங்கள் சச்சின் மீது மதிப்பு வைத்துள்ளோம், இது என்றும் தொடரும். தயவு செய்து இதுபோல மோசமான முறையில் விளம்பரம் தேடுவதை நிறுத்துங்கள். ஸ்ரீரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.