Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் கிரிக்கெட்டின் பேரழிவுக்கு அருமையான விருந்து..! சச்சின் கோபம்

sachin expressed his opinion about using 2 news balls in odi
sachin expressed his opinion about using 2 news balls in odi
Author
First Published Jun 22, 2018, 4:28 PM IST


ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் புதிய பந்துகளை பயன்படுத்துவது, அதன் பேரழிவுக்கு சிறந்த விருந்தாக அமையும் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300 ரன்களை கடந்தாலே பெரிய விஷயமாக இருந்த காலமெல்லாம் கடந்து, தற்போதெல்லாம் எளிதாக 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், கிரிக்கெட் போட்டி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைய வேண்டும் என்பதே.

sachin expressed his opinion about using 2 news balls in odi

எப்படி என்று கேட்கிறீர்களா? கிரிக்கெட்டை பார்க்க ரசிகர்கள் பெருமளவு திரண்டு வந்தால்தான் டிக்கெட்டுகள் விற்பனையாகி லாபம் கிடைக்கும். பார்வையாளர்களை மகிழ்வித்தால்தான் அவர்களின் வருகை அதிகமாகும். பார்வையாளர்களை கவரும் இடத்தில் தான் பிரச்னை ஆரம்பமாகிறது. 

பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்து பந்துகளை பறக்கவிட வேண்டும் என்றுதான் பார்வையாளர்கள் விரும்புவார்களே தவிர பவுலர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்றல்ல. அந்தவகையில், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக, கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒருசார்பு விளையாட்டாக மாறிவிட்டது. 

sachin expressed his opinion about using 2 news balls in odi

முன்பெல்லாம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் ஒரே பந்துதான் பயன்படுத்தப்படும். அதனால் முதலில் பந்துவீசுபவர்களுக்கு மட்டுமே கடினமாக இருக்கும். பிறகு பந்து தேய்ந்துவிட்டால், வேகப்பந்துவீச்சாளர்களால் ”ரிவர்ஸ் ஸ்விங்” செய்ய முடியும். அதேபோல் பந்து தேய்ந்தால்தான் ஸ்பின் பவுலர்களால் பந்தை நன்கு சுழலவிட முடியும்.

sachin expressed his opinion about using 2 news balls in odi

ஆனால் 2011க்கு பிறகு ஒருநாள் போட்டியின் இரண்டு பேட்டிங்குக்கும் தனித்தனியாக புதிய பந்துகள் பயன்படுத்த ஐசிசி அனுமதியளித்தது. இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் புதிய பந்து பயன்படுத்தப்படுவதால், வேகப்பந்து வீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்யமுடியவில்லை. அதேபோல ஸ்பின் பவுலர்களால் பந்தை நன்றாக சுழலவிட முடியவில்லை. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி ரன்களை குவித்து விடுகின்றனர். 

sachin expressed his opinion about using 2 news balls in odi

அதனால் ஒருநாள் கிரிக்கெட், ஒருசார்பு போட்டியாக மாறிவருகிறது. இதுதொடர்பான வேதனையையும் ஆதங்கத்தையும் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Having 2 new balls in one day cricket is a perfect recipe for disaster as each ball is not given the time to get old enough to reverse. We haven’t seen reverse swing, an integral part of the death overs, for a long time. <a href="https://twitter.com/hashtag/ENGvsAUS?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ENGvsAUS</a></p>&mdash; Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1009889444663472128?ref_src=twsrc%5Etfw">June 21, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ஒருநாள் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்துவது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்துவது, ஒருநாள் போட்டிகளின் பேரழிவிற்கு சிறந்த விருந்து. ஒவ்வொரு புதிய பந்தும் ஸ்விங் செய்வதற்கு ஏற்ற வகையில் பழையதாவதற்கு நேரம் எடுக்கும். அதற்குள் அடுத்த இன்னிங்ஸிற்கு புதிய பயன்படுத்துவதால், நீண்டகாலமாக ரிவர்ஸ் ஸ்விங்கையே பார்க்க முடியவில்லை என காட்டமாக பதிவிட்டுள்ளார். 

sachin expressed his opinion about using 2 news balls in odi

சச்சினின் இந்த ஆதங்கத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் ஆதரவு தெரிவித்ததோடு, சச்சினின் கருத்தை வழிமொழிந்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios