Asianet News TamilAsianet News Tamil

நான் எங்கே வேணும்னா போவேன்.. என்ன வேணும்னா பண்ணுவேன்!! அது யாருக்கும் தேவையில்லாத விஷயம்.. ஹிட்மேன் கோபம்

rohit revealed his angry in twitter after clearing yo yo test
rohit revealed his angry in twitter after clearing yo yo test
Author
First Published Jun 21, 2018, 10:55 AM IST


யோ யோ டெஸ்டில் ரோஹித் சர்மா கலந்துகொள்வது தொடர்பாக பல்வேறு கருத்துகள் வலம்வந்த நிலையில், தனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட தேவையில்லை என்பதுபோல கோபத்துடன் டுவீட் செய்துள்ளார் ரோஹித் சர்மா. 

இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதிக்கு அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது. அனுபவ வீரர்கள், சீனியர் வீரர்கள், கேப்டன் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இந்த டெஸ்ட் அனைத்து வீரர்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. 

யோ யோ டெஸ்டில் தேர்வாகாத வீரர்கள், அணியில் இடம்பிடிக்க முடியாது. எவ்வளவு சிறந்த ஆட்டத்திறன் மிகுந்த வீரராக இருந்தாலும் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். யோ யோ டெஸ்டின் மூலம் கடந்த ஆண்டில் முதலில் களையெடுக்கப்பட்டவர் ரெய்னா. பின்னர் யுவராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் யோ யோ டெஸ்டில் தேறாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

rohit revealed his angry in twitter after clearing yo yo test

யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் இந்திய ஏ அணிக்காக ஆடும் வாய்ப்பை சஞ்சு சாம்சன் தவறவிட்டார். அதன்பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த டெஸ்டில் தோல்வியடைந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தனது திறமையை மற்றுமொரு முறை நிரூபித்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அம்பாதி ராயுடு யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

தோனி, கோலி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் கடந்த 15ம் தேதி யோ யோ டெஸ்டில் கலந்துகொண்டனர். ஆனால் அன்றைய தினம் ரோஹித் சர்மா ரஷ்யாவில் இருந்ததால், பின்னர் கலந்துகொள்வதற்கு அனுமதி பெற்றிருந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு ரோஹித் சர்மா கடந்த 17ம் தேதியன்று யோ யோ டெஸ்டில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் நேற்றைய தினம் தான் ரோஹித்துக்கு உடற்தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. 

rohit revealed his angry in twitter after clearing yo yo test

ஒருவேளை ரோஹித் சர்மா யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்தால், அவருக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் ரஹானே இடம்பெறுவார் என்று தகவல்கள் பரவின. மேலும் யோ யோ டெஸ்ட் நடத்தப்பட்ட குறிப்பிட்ட தேதியில் ரோஹித் கலந்துகொள்ளாதது குறித்தும் விமர்சனங்களும் கருத்துகளும் பரவின. 

இந்நிலையில், நேற்று யோ யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்த ரோஹித் சர்மா, தன் மீதான விமர்சனங்களுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Dear... it’s no ones business how &amp; where I spend my time.I’m entitled to have time off as long as I follow protocol.Let’s debate some real news shall we😊 &amp; to a few channels,I had just 1 chance to clear my yo-yo that was today.Verification before reporting is always a good idea</p>&mdash; Rohit Sharma (@ImRo45) <a href="https://twitter.com/ImRo45/status/1009400836722606080?ref_src=twsrc%5Etfw">June 20, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரோஹித், நான் எங்கு சென்று எப்படி எனது நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறேன் என்பது மற்றவர்களுக்கு தேவையில்லாத விஷயம். நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான நேரத்தை ஒதுக்குவது எனது உரிமை. இதுதொடர்பான தவறான செய்திகளை பரப்பாமல், ஒருமுறைக்கு இருமுறை செய்தியை உறுதி செய்து கொண்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என ரோஹித் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios